
மக்களும் அடிப்படைத்தேவைகளும்

காற்றுக்கு வந்த சோதனை காத்து வாங்கலையோ காத்து! காத்து வாங்கலையோ காத்து!. எங்கிட்ட ரோசாப்பூ மணம் வீசும் காத்து இருக்கு!.குளு குளு என இருக்கும் இமயமலை காத்து இருக்கு!. கோடைக்கு இதமான ஊட்டி,கொடைக்கானல் காத்து இருக்கு!. முண்டி அடிக்கும் மும்பை இருக்கு! சிங்கார சென்னை காத்து இருக்கு!. காத்து வாங்கலையோ காத்து! எனக் காற்றை விற்றுக்கொண்டே வந்தாள் வானவி.


''அதோ! காத்து விக்கிற வானவி அக்கா வந்துட்டாங்க.இதுக்குத்தானே இம்புட்டு நேரம் காத்திருந்தேன்''என்றாள் இதழினி. ''என் பேரு மாரப்பன்.மார்பைத் தட்டி நிமிர்ந்து நடந்த நான்,மூச்சுவிட முடியாம நாரப்பனா ஆயிட்டேன்''என்றான் மாரப்பன். ''இவன் ஒருத்தன் எதாச்சும் பொலம்பிகிட்டே இருப்பான்''என்றான் கதிர்.



''காத்தம்மா காத்தம்மா காசு எம்புட்டு''என்றாள் இதழினி. ''இதோ பாருமா சும்மா வளவளனு பேரம் பேசக்கூடாது.fixed price வாங்குறதும்,வாங்காததும் உங்க choice,அதுதான் என்னோட voice.காத்தோட விலை வெறும் 50000ரூபாய் தான்''என்றாள் வானவி. ''என்னது 50000ரூபாயா!!''என்றபடி வாய் பிளக்கிறாள் இதழினி. ''நல்ல சுத்தமான,மாசில்லாத காத்துமா..10நாள் quarenty 5நாள் warrenty.சும்மா மூக்குல வச்சி வச்சி இழுத்தா ஒரு மாசம் தாங்கும்''என்றாள் வானவி.




''carல சொகுசா போகணுமாம்,குளுகுளு ACல தூங்கணுமாம்,bikeல சர்ர்ர்ருனு போகணுமாம்.இப்படி எல்லாத்துக்கும் ஆசைப்பட்டு நச்சுப்புகையை காத்துல கலந்துட்டீங்களேடா.ACயும்,வாகனங்களும் ஆடம்பரம்,காற்று நமக்கு அத்தியாவசியம்''என்று அறிவுரைத்தான் மணிமாறன்.



உணவு மாத்திரை 'கிடைக்கும் !கிடைக்கும்! தரமான!ஆரோக்கியமான!சுகாதாரமான! உணவு மாத்திரை கிடைக்கும்.இட்லி மாத்திரை,சாம்பார் மாத்திரை,சட்னி மாத்திரை. ஏன் வடை மாத்திரை கூட சாப்பிட்டிருப்பீங்க!.Full meals மாத்திரை சாப்பிட்டிருக்கீங்களா?,ஒரு மாத்திரை போதும் ஒரு நாளைக்கு தாங்கும்.வயிறு சும்மா கும்முனு சட்டுனு பசி அடங்கிடும்''என்று உணவு மாத்திரை விற்றுக்கொண்டே வந்தான் அருளன்.



''ஐயா!ஐயா! எனக்கு பத்து மாத்திரை கொடுங்களேன்''என்று கேட்டாள் புகழ்மதி. ''ஒரு மாத்திரை ஆயிரம்'' ரூபாய்''என்றான் அருளன். ''என்னது ஆயிரம் ரூபாயா! அப்போ பத்து மாத்திரை பத்தாயிரம் ரூபாயா!''என வியந்தாள் புகழ்மதி. ''அதிக விளைச்சல் வேணும்ணு பூச்சிக்கொல்லி மருந்தை கொட்டோ கொட்டுனோம்.ஒழுங்கா இயற்கையான முறையில விவசாயம் செஞ்சிருந்தா நமக்கு ஏன் இந்த நிலைமைனு''கன்னத்தில் அறைந்ததுபோல் கூறினாள் இளந்தென்றல்.






'அப்பப்பப்பா என்ன வெயிலு!என்ன வெயிலு! சூரியன்கிட்டேயே போயிட்டு வந்த மாதிரி இருக்கு.இந்த டாக்டர் வேற ஒரு நாளைக்கு மூனு சொட்டு தண்ணீர் குடிக்க சொல்றாரு.அந்த காலத்தில எங்க பாட்டி சொல்ல கேட்டிருக்கே.ஆத்துல,குளத்துல எல்லாம் குளிப்பாங்களாம்.ஏன் ஆடு,மாடு கூட குளிப்பாட்டுவாங்களாம்.இப்ப ஆற்றையும் காணோம்,குளத்தையும் காணோம்'என்று தனக்குத் தானே ஆதங்கத்தைக் கூறிக்கொள்கிறாள் மகிழ்மதி.


செவ்வாய் கிரகப் பயணம்
''டேய் பூமியில இருக்கிற பூமிநாதா,நான் செவ்வாய் கிரகத்துல இருந்து செவ்வந்தி அக்கா பேசுறேன்டா,நல்லா இருக்கியாடா?''எனப் பேசினாள் செவ்வந்தி.
''அக்கா சொல்லுகா,எங்க கா நல்லா இருக்கிறது.இங்கே ஒரே தண்ணீர் பிரச்சனை.மழை வெள்ளம் வரும் போது சேமிச்சி வைக்கல,சேமிச்சி வச்சத முறையா பயன்படுத்தவும் இல்லை''என்று புலம்பினான் பூமிநாதன்.



''நீர்நிலைகளை ஆக்கரமிச்சி குப்பையைக் கொட்டி மேடாக்கி கட்டடம் கட்டி வச்சி வாழ்ந்த எங்கே கா தண்ணீர் இருக்கும்''என்றான் பூமிநாதன்.
''நான் அப்பவே சொன்னேன் செவ்வாய் கிரகத்திற்கு செவ்வந்தி அக்கா கூட வந்துட்றானு சொன்னேன்,நீ கேட்டியாடா''என்றாள் செவ்வந்தி.
'இதோ ராக்கெட்டை பிடிச்சி ராத்திரிக்கே வந்துட்றேன்'என்று பதிலுரைத்தான் பூமிநாதன்.




- Full access to our public library
- Save favorite books
- Interact with authors

இயற்கையை பகுத்தறிவோம்! படிப்பறிவோம்! செயல்படுத்துவோம்!பாதுகாப்போம்!

- < BEGINNING
- END >
-
DOWNLOAD
-
LIKE
-
COMMENT()
-
SHARE
-
SAVE
-
BUY THIS BOOK
(from $3.19+) -
BUY THIS BOOK
(from $3.19+) - DOWNLOAD
- LIKE
- COMMENT ()
- SHARE
- SAVE
- Report
-
BUY
-
LIKE
-
COMMENT()
-
SHARE
- Excessive Violence
- Harassment
- Offensive Pictures
- Spelling & Grammar Errors
- Unfinished
- Other Problem

COMMENTS
Click 'X' to report any negative comments. Thanks!